சஜித்துடைய கூட்டணியிலேயே நாங்கள் இருக்கிறோம்: முகா தலைவர் ரவூப் ஹக்கீம்

Date:

‘புதியதொரு கூட்டணி சம்பந்தமாக சில கருத்துக்கள் அடிபடுகின்றன. அதில் சேர நாங்களும் தயாராக இருக்கின்றோமா என்ற ரீதியில் கேள்விகளைக் கேட்கின்றார்கள். எங்களைப் பொறுத்த வரையில், சஜித் பிரேமதாச தலைமையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி கூட்டணியில் நாங்கள் இருக்கின்றோம் என மு.கா.தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் சம்பந்தமாக இரண்டாவது நாளாக  இன்று உயர் நீதிமன்றத்திற்கு வந்திருந்த ரவூப் ஹக்கீமிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், சஜித் தலைமையில் எதிர்க்கட்சி கூட்டணியைத் தவிர, வேறு எந்த கூட்டணியிலும் இணைவதற்கு இதுவரை எந்தவிதமான பேச்சுவார்த்தைகளிலும் நாங்கள் ஈடுபடவில்லை’ எனவும் குறிப்பிட்டார்

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...