சர்வதேச தரத்திற்கு அமையவே சட்டத்திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன!

Date:

இலங்கையில் நீதி செயற்பாட்டை வலுப்படுத்துவதற்காகவே சர்வதேச தரத்திற்கு அமைய  புதிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் கொண்டு வரப்படுவதாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் Marc-Andre-Francheசிடம் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளருக்கும், நீதியமைச்சருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று (19) நீதியமைச்சில் நடைபெற்றது.

உலக நாடுகளில் நீதி செயற்பாட்டை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் அனுபவங்கள் சம்பந்தமாகவும் இணைப்பாளர், நீதியமைச்சருடன் கருத்துக்களை பரிமாறிக்கொண்டுள்ளார்.

எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாகவும் சட்டத்தின் ஆதிபத்தியத்தை உறுதிப்படுத்த இலங்கை எடுக்கும் முயற்சியில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் வழிக்காட்டல்கள் மிகவும் முக்கியம் என அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...