சென்னையில் இரண்டாவது ஆண்டாக பன்னாட்டு புத்தகக் காட்சி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இதில் என்ன சிறப்புகள் உள்ளன என்றும், வழக்கமான புத்தகக் காட்சியில் இருந்து பன்னாட்டு புத்தகக் காட்சி எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பது பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம்.
மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள சென்னை புத்தக கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த புத்தக கண்காட்சி ஜனவரி 19 வரை நடைபெறும்.இந்த நிலையில் சென்னையில் இரண்டாவது ஆண்டாக பன்னாட்டு புத்தகக் காட்சி தொடங்கி உள்ளது. நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழக அரசின் பன்னாட்டு புத்தகக் காட்சி 16 ஆம் தேதி தொடங்கியது.
கடந்த ஆண்டு நடைபெற்ற பன்னாட்டு புத்தகக் காட்சியில் 30 நாடுகள் வரை பங்கேற்றன. இதில் 120 நூல்களை வெவ்வேறு மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருந்தன. அவற்றில் 52 நூல்கள் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நல்ல வரவேற்பும் கிடைத்தது.
புத்தகக் காட்சியில் 80 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. இறுதி நாளில் தமிழில் மொழிப்பெயா்க்கப்பட்ட 200 புத்தகங்கள் வெளியிடப்படவுள்ளது.
பன்னாட்டு புத்தகக் காட்சியில் 40 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. நமது நாட்டில் இருந்து 10 மாநிலங்களும் கலந்து கொண்டுள்ளன.
மலேசியா, கனடா, பிரிட்டன், இந்தோனேசியா, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, பின்லாந்து, இத்தாலி, துருக்கி, சவுதி அரேபியா, கிரேக்கம், லெபனான், வடக்கு மாசிடோனியா, ஸ்லோவேனியா, லிதுவேனியா, லாத்வியா, செனகல், செர்பியா, பிரேசில், மயன்மார், அல்பேனியா, தான்சானியா, நியூசிலாந்து, ஆர்மீனியா, ஜார்ஜியா, போர்ச்சுக்கல், வங்கதேசம், தாய்லாந்து, வியட்நாம், போலந்து, பிலிப்பைன்ஸ், எகிப்து, ஈரான் ஆகிய நாடுகள் பங்கேற்று உள்ளன.
தமிழ் எழுத்தாளர்களை உலக அளவில் அறிமுகம் செய்யும் மேடையாக விளங்குகிறது.