ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுவிட்சர்லாந்து பயணம்!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ்-க்ளோஸ்டர்ஸ் நகரில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 54 ஆவது உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்.

உலகப் பொருளாதார மன்றம் என்பது, அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் நிகழ்ச்சி நிரல்களை வடிவமைப்பதற்காக உலகின் முக்கிய முடிவெடுப்பவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் ஒன்று கூடும் ஒரு உலகளாவிய தளமாகும். 1000 க்கும் மேற்பட்ட அரசாங்கங்கள், சர்வதேச நிறுவனங்கள், உலகளாவிய நிறுவனங்கள், சிவில் சமூகம், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் பிரதிநிதிகள் மன்றத்தில் கலந்துகொள்வார்கள்.

இந்த விஜயத்தின் போது, ​​சுவிஸ் ஆசிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Green Tech Forum இல் ஜனாதிபதி விக்கிரமசிங்க,  “Paving the way towards an Energy Secure Sri Lanka” என்ற தலைப்பில் முக்கிய குறிப்பு உரையை ஆற்றவுள்ளார். சுவிஸ் ஆசிய வர்த்தக சம்மேளனத்துடன் இலங்கை முதலீட்டு சபை ஏற்பாடு செய்துள்ள வர்த்தக வட்டமேசை மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் அவர் இம்மாதம் 24ம் திகதி மீண்டும் நாடு திரும்புவார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...