நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை நிறைவேற்றுவது பேரழிவை தரும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை

Date:

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் பாராளுமன்றத்தில் அவசரமாக அவசரமாக கொண்டு வர முயற்சிக்கும் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) தனது ஆட்சேபனையை வெளியிட்டுள்ளது.

இது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆசியப் பிரிவுக்கான பிரதிப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி ஒரு அறிக்கையில்,

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நீண்ட கால சிறைத்தண்டனைகள் மூலம் தண்டிக்கப்படும் பரந்த மற்றும் தெளிவற்ற புதிய பேச்சு தொடர்பான குற்றங்களை உருவாக்கும்.

இந்த ஆண்டு இறுதியில் இலங்கை பராளுமன்றம் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களுக்கு தயாராகி வரும் நிலையில், இந்தச் சட்டம் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை கடுமையாக அச்சுறுத்தும்.

முன்மொழியப்பட்ட சட்டமூலம் ஆன்லைன் துன்புறுத்தல், துஷ்பிரயோகம் மற்றும் மோசடி ஆகியவற்றிற்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது.

ஆணையகம் நியமித்த “நிபுணர்களுக்கு” சந்தேக நபர்களின் வளாகத்திற்குள் நுழைந்து சோதனையிட அதிகாரம் அளிக்கப்படும். சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு அதிக அபராதம் மற்றும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம், இந்தச் சட்டம் கிட்டத்தட்ட அனைத்து வகையான சட்டபூர்வமான வெளிப்பாட்டையும் குற்றமாக்கக்கூடும், இது கருத்துச் சுதந்திரத்தின் மீது பாரிய விளைவை ஏற்படுத்தும் சூழலை உருவாக்குகிறது என்று கூறியுள்ளது.

கூகுள், ஆப்பிள் மற்றும் மெட்டா போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு தொழில்துறை அமைப்பான Asia Internet Coalition, இந்த சட்டமூலம் “எதிர்ப்புகளை ஒடுக்குவதற்கான ஒரு கொடூரமான அமைப்பு” என்றும், “இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் சாத்தியமான வளர்ச்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும்” என்றும் எச்சரித்துள்ளது.

இலங்கையின் அடக்குமுறைச் சட்டங்கள் பல தசாப்தங்களாக பரவலான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்தது மற்றும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு பங்களித்துள்ளது.

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை நிறைவேற்றுவது பேரழிவு தரும் பின்னடைவாக இருக்கும் – என்றும் அவர் எச்சரித்தார்.

 

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...