நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்!

Date:

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று காலை 09.30 இற்கு ஆரம்பமாகிய  நிலையில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

உயர் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுக்கு உட்பட்டு ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அங்கீகாரம் நேற்றைய தினம் பெறப்பட்டது.

இலங்கையில் இடம்பெறும் நிகழ்வுகள் குறித்த சில அறிக்கைகளை இணையத்தின் ஊடாக வெளிப்படுத்துவதனை தடை செய்தல், நிகழ்நிலை கணக்குகள் மற்றும் போலியான கணக்குகளை தங்கள் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதனை தடுக்கும் வகையிலும் இந்த சட்டமூலம் கொண்டு வரப்படுகிறது.

அத்துடன், இந்த சட்டமூலம் நாட்டில் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களை அடையாளம் காணவும், தவறான அறிக்கைகளை பகிர்வதற்காக பணம் மற்றும் ஏனைய உதவிகள் வழங்கப்படுவதனை தவிர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது.

மேலும், நிகழ்நிலை பாதுகாப்புக்கான ஆணைக்குழுவை நிறுவுவதற்கு குறித்த சட்டமூலத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களில் நடைபெறவுள்ளது.

இருப்பினும், இந்த சட்டமூலத்திற்கு எதிராக எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கடசியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...