புத்தளம் மக்கள் அழைத்தால் மட்டுமே அரசியலுக்கு வருவேன் – சனத் நிஷாந்தவின் மனைவி

Date:

அரசியலில் பிரவேசிக்கும் நம்பிக்கை தனக்கு இல்லாவிட்டாலும், தனது கணவரின் அரசியல் வெற்றிடத்தை நிரப்புமாறு புத்தளம் மக்களும் கட்சியும் கோரினால், அது குறித்து பரிசீலிக்கலாம் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சாமரி பிரியங்கா பெரேரா தெரிவித்துள்ளார்.

அண்மையில் வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பொலிஸ் சார்ஜன்ட் அனுராதா ஜயக்கொடியின் வீட்டுக்குச் சென்ற திருமதி சாமரி பிரியங்கா பெரேரா ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

“எனது கணவர் புத்தளம் மாவட்ட மக்களுக்கும் நாட்டு மக்களுக்கும் பெரும் சேவையாற்றினார். அவரிடம் உதவி கோரி வந்த எவரும் வெறுங்கையுடன் திரும்பியதில்லை.

அவருக்கு என்ன நடந்தது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. கனவு போல உள்ளது. எனது கணவரின் மரணம் குறித்த விடயங்கள் வெளியாகும் முன்னரே சில ஊடகங்கள் நான் அரசியலுக்கு வருவதாக செய்தி வெளியிட்டன.

இதுபோன்ற செய்திகள் குறித்து எந்த ஊடகமும் என்னிடம் கேட்கவில்லை. நான் அரசியலுக்கு வருகிறேன் என்று இதுவரை எந்த ஊடகத்திலும் அறிக்கை விடவில்லை.

அந்த மாமனிதரின் அரசியல் விவகாரங்களில் பாதியை நான் நிர்வகித்து, அவருடைய தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய போதும், அரசியலுக்கு வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

இன்னும் அந்த நம்பிக்கை இல்லை. ஆனால் அவர் விட்டுச் சென்ற இடத்தை கையகப்படுத்தி மக்கள் பணியை முன்னெடுத்துச் செல்லுங்கள் என்று புத்தளம் மக்களும் நாட்டு மக்களும் கேட்டால் அதுபற்றி நான் சிந்திக்க வேண்டி வரலாம்.

இப்போது எனக்கு ஒரு பெரிய பொறுப்பு உள்ளது. எனது நான்கு குழந்தைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டும் . எனக்கு நல்ல வேலையும் தன்னம்பிக்கையும் இருக்கிறது.

நான் தனியாக இல்லை என்ற உணர்வுடன் எதிர்காலத்தை எதிர்கொள்கிறேன். நான் அரசியலுக்கு வந்தாலும் என் கணவர் செய்த அரசியலை நான் செய்ய வேண்டியதில்லை.

சிலர் அவரை விமர்சித்தாலும், அவர் வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் ஒரு அரசியல்வாதி. நாளின் பெரும்பகுதி மக்களுக்காக உழைத்தவர். அவரை சுற்றி ஒரு பெரிய கூட்டம் இருந்தது. அதுதான் அவருடைய பலம். எனது கணவர் புத்தளம் மாவட்டத்தில் ஏராளமான மக்களுக்கு காணிகளை வழங்கினார். வீடற்றவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்த என் கணவர், உடலை அடக்கம் செய்ய இடத்தை இழந்தார். இறுதியில், தற்காலிகமாக கட்டப்பட்ட இடத்தில் இறுதிச் சடங்குகளை கூட செய்ய வேண்டியிருந்தது.

புத்தளம் மாவட்டத்தில் பல பெண்கள் அமைப்புகளுக்கு நான் தலைமை தாங்குகின்றேன். பெண்களின் வலி எனக்குத் தெரியும். இன்று இச்சம்பவத்தினால் என்னைப் போன்று பொலிஸ் சார்ஜன்ட் அனுராதாவின் மனைவி திருமதி லக்சிகா பிரசாதினியும் மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளார். அவரது மகனுக்கு என்ன தேவையோ அதை செய்வேன் என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...