தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
மாத்தறை – பெலியத்த பகுதியிலேயே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரில் ஒருவர் அபே ஜன பல சக்தியின் கட்சி தலைவர் சமன் பெரேரா கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
டிபெண்டர் ரக வாகனமொன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து கெப்ரக வாகனமொன்றில் பிரவேசித்தவர்கள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.