இந்த வருடம் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வேட்பாளராக நிறுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு இன்று தீர்மானித்துள்ளது.
ஆதாரங்களின்படி ஜனாதிபதி விக்கிரமசிங்க தேசிய வேட்பாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழுவில் உதவித் தலைவராக அகிலவிராஜ் காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, ஹரின் பெர்னாண்டோ மற்றும் ருவான் விஜேவர்தன ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.