விவசாய விஞ்ஞான வினாத்தாள் வெளியானமை தொடர்பில் மேலுமொருவர் கைது!

Date:

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் வினாத்தாள் வெளியான சம்பவம் தொடர்பில் மொரட்டுவை மகா வித்தியாலய பரீட்சை மண்டப பெண் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டு அம்பாறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பரீட்சை மண்டப பொறுப்பாளர், மண்டபப் பணியாளர் மற்றும் முதலில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஆகியோரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பரீட்சை மண்டப பொறுப்பாளர்   பிலியந்தலை பிராந்திய கல்வி அலுவலகத்தில் ஆசிரியர் ஆலோசகராக கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

வெலிகம பிரதேச சபைக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான தேர்தல் நவம்பர் 28!

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர்...

‘தேசிய தொழுநோய் மாநாடு’ ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்!

நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில்,...

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதிக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதியும் மற்றும் இயக்குநருமான பிலிப் வார்டுக்கும்...

உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் உரையாற்றிய சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் உரையாற்றினார். இந்தியாவிற்கு...