ஹலால் உற்பத்தித் துறையில் பிரதான முதலீடுகளை ஆராயும் “மக்கா ஹலால் போரம்” மாநாடு நிறைவு!

Date:

சவூதி அரேபியா மக்காவில் ஜனவரி 23 முதல் 25 வரை நடைபெற்ற மூன்று நாள் மக்கா ஹலால் மன்ற மாநாட்டில் ஹலால் தொழில் துறையில் பல முக்கிய முதலீட்டு கூட்டாண்மை மற்றும் நம்பிக்கைக்குரிய பொருளாதார வாய்ப்புக்கள் குறித்து ஆராயப்பட்டன,

சவூதி வர்த்தக அமைச்சர் மஜீத் அல்-கசாபியின் தலைமையில் மக்கா கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகள் மையத்தில் மேற்படி மாநாடு நடைபெற்றது.

‘ஹலால் தொழிற்துறையில் படைப்பாற்றல்’ என்ற தொனிப்பொருளில் ஆரம்பமான இந்த நிகழ்வுக்கு Manafea  மற்றும் ஹலால் சேவைகளுக்கான இஸ்லாமிய சேம்பர் என்பன ஆதரவு வழங்கியிருந்தன,

இதன்போது 10 க்கும் மேற்பட்ட கலந்துரையாடல் அமர்வுகள் மற்றும் 250 கூட்டங்கள்,  உலகில் உள்ள ஹலால் தொழில் துறை தொடர்பான எண்ணற்ற பிரச்சினைகள் மற்றும் தலைப்புகளின் கீழ் விவாதிக்கப்பட்டன

ஹலால் சான்றிதழ் மற்றும் தரநிலைகள், சமீபத்திய தரநிலைகள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகள் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துதல், ஹலால் உற்பத்திகள் மற்றும் சேவைகள், ஹலால் உணவுத் தொழிற்துறைக்கு கூடுதலாக  விநியோகச் சங்கிலி மேலாண்மை, தரக் கட்டுப்பாடு, உணவுப் பாதுகாப்பு மற்றும் பல்வேறு நுகர்வோர் விருப்பங்கள் குறித்த பல தலைப்புக்களில் இங்கு ஆராயப்பட்டன.

முஸ்லிம்  மற்றும் முஸ்லிம் அல்லாத நாடுகளில் இருந்து ஹலால் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால் ஹலால் தொழில் துறை ஒரு மேல்நோக்கிய போக்கைக் கண்டுள்ளது.

உலகில் ஹலால் தொழில் துறையானது மிகவும் நம்பிக்கைக்குரிய பொருளாதாரத் துறைகளில் ஒன்றாக வளர்ச்சி கண்டுள்ளது.

ஏனெனில் உலகளாவிய இஸ்லாமியப் பொருளாதாரத்தின் யதார்த்தம் குறித்த அறிக்கை, 2024 ஆம் ஆண்டில் ஹலால் பொருட்களுக்கான நுகர்வோர் செலவினம் 2.4 டிரில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்வு கூறியுள்ளது.

ஹலால் பொருட்கள் மற்றும் சேவைகள் அதிகரித்து வருவதால் முஸ்லிம் நுகர்வோர் மட்டுமல்ல, முஸ்லிமல்லாதவர்களும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவுகளால் ஈர்க்கப்படுகின்றனர்.

உலகளாவிய ஹலால் சந்தை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது, இந்த சந்தையின் வளர்ச்சியின் அளவு 2025 ஆம் ஆண்டில் $7.7 டிரில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்லாமிய நிதித் துறையானது உணவு மற்றும் பானங்கள் துறை, மருந்து, மருத்துவம், சுகாதாரம் மற்றும் அழகுசாதனத் தயாரிப்புக்களில் தொடர்ந்து முன்னணி வகிக்கிறது,

ஹலால் துறையில் முன்னணி நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியா, உலகளாவிய ஹலால் தொழில்துறையின் நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பொது முதலீட்டு நிதியம், 2022 ஆம் ஆண்டில் “ஹலால் தயாரிப்புகளை உருவாக்குவதில்” நிபுணத்துவம் பெற்ற நிறுவனத்தை நிறுவுவதற்கு, , சவூதி உணவு மற்றும் மருந்து ஆணையத்துடன் இணைந்த ஹலால் தயாரிப்புகளுக்கான மையத்தை நிறுவியதுடன், இறைச்சி மற்றும் கோழி இறைச்சியை உறுதிசெய்வதில் மேற்பார்வைப் பங்கையும் இது கொண்டுள்ளது.

உணவுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருத்துவச் சாதனங்கள் இஸ்லாமிய சட்டத்தை மீறும் எந்தவொரு தயாரிப்பும் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் தயாரிக்கப்படுவது இந்த மையத்தின் முக்கிய பணியாகும்,

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...