அதிபரின் அர்ப்பணிப்பும் முகாமைத்துவதிறனிலுமே ஒரு பாடசாலையின் முன்னேற்றம் தங்கியுள்ளது: கலாநிதி இஸ்மத் ரம்ஸி

Date:

இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகம் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு உயர்கல்வித் துறையில் கூடிய கவனம் செலுத்துவதுடன் சக இனத்தவருடன் நல்லிணக்கத்தை பேணுவதும் காலத்தின் தேவையாகும் என மலேசியாவில் மலாயாப் பல்கலைக்கழக கல்விப் பீடத்தின் கலாநிதி இஸ்மத் ரம்ஸி தெரிவித்தார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற இலங்கை முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த உயர் மட்டக் கலந்துரையாடலை அல்முஹ்ஸின் விஞ்ஞானக் கல்லூரியின் ஸ்தாபகத் தலைவரும் மக்கள் மன்றத்தின் தலைவருமான அல்ஹாஜ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

முன்னாள் தகவல் திணைக்களப்பணிப்பாளரும் பகன அகடமியின் பணிப்பாளருமான ஹில்மி முஹம்மட் இதில் பங்கேற்றிருந்ததுடன் இலங்கையின் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் விரிவுரையாளர் மருதமுனை உபைதுல்லா ஆகியோரும் மற்றும் வர்த்தக பிரமுகர்களான ஏ.எல்.எம். சக்காப் ஹாஜி, எம்.எஸ்.ஏ. ஹசன் ஹாஜி, எம்.எல்.ஏ அப்துல் ரஹ்மான் ஹாஜி, ஏ.ஆர்.எம். ரஹ்மான் ஹாஜி ஹுஸைன் சிராஜ் ஹாஜி, எம்.எஸ்.ஏ. முஹீஸ் ஹாஜி, அப்துல் காதர் ஹாஜி, எம்.ஆர்.ஏ. அஷ்ரப், ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

அங்கு தொடர்ந்து பேசிய கலாநிதி இஸ்மத் ரம்ஸி,

பாடசாலை கல்வியில் இன நல்லுறவு தொடர்பான விடயங்களை சேர்க்கும் படி இலங்கையின் அரசாங்கத்துக்கு நான் ஏற்கனவே ஆலோசனை வழங்கியுள்ளேன்.

மலேசியாவும் ஒரு பல்லின பல் மத நாடாக விளங்கினாலும் சகல இனத்தவரும் புரிந்துணர்வுடன் வாழ்கின்றனர் மலேசியாவின் முன்னேற்றத்திற்கான ரகசியமும் இதுதான்.

ஒரு பாடசாலையின் முன்னேற்றம் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் ஆசிரியர்களை போலவே திறமையும் முகாமைத்துவ பண்புகளும் உடைய அதிபரின் கையிலே தங்கியுள்ளது.

எமது நாட்டில் உள்ள பாடசாலைகளில் அதிபர்களது முகாமைத்துவ திறனை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அதற்கு அவர்களுக்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

மேலும் ஆசிரியர் அதிபர்களுக்கு இடையிலான உறவுகள் சீரான முறையில் வலுப்படுத்துவதன் மூலமே கற்பித்தல் செயல்பாடுகளில் ஏற்படும் இடைவெளிகளை பூர்த்தி செய்யமுடியும்.

ஆசிரியர் மாணவர்களுக்கிடையிலான உறவு சீரானதாக சிறப்பானதாக அமைவதால் பாடசாலையில் கல்வித்தர வளர்ச்சி மேலோங்கும் எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

சில பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆசிரியர் மட்டத்திலான குழுநிலை பிரிவானது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

எனவே இவற்றை நிவர்த்தி செய்ய அதிபர்களின் முகாமைத்துவ திறமைகளை வலுப்படுத்தும் சந்தர்ப்பங்களை உருவாக்குவது சமூக கடமை எனவும் சுட்டிக்காட்டினார்.

இங்கு கருத்து தெரிவித்த அல்ஹாஜ் எம்.எம்.ஏ.இஸ்மாயில், கம்பஹா மாவட்டத்திலே முஸ்லிம் அரசினர் பாடசாலைகளிலே கூடுதலான முஸ்லிம் மாணவர்களில் அதிகமானோர் கல்வி கற்கின்றர்.

20க்கும் மேற்பட்ட முஸ்லிம் பாடசாலைகள் காணப்படுவதுடன் அவற்றில் கற்றல், கற்பித்தல் தரத்தை மேம்படுத்துவது காலத்தின் தேவை எனவும் அதற்காக மலேசியாவிலுள்ள இலங்கையின் பல்கலைக்கழக ஆளுமையின் உதவி அவசியப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் மலேசியாவில் பணிபுரியும் பல்கலைக்கழக ஆளுமைகளின் வழிகாட்டல் ஒத்துழைப்பு என்பவற்றை பெற்றுத் தருமாறும் கேட்டுக்கொண்டார்.

இக்கலந்துரையாடலின் இறுதியில் கம்பஹா மாவட்ட அரசினர் முஸ்லிம் பாடசாலை அதிபர்களை மலேசியாவுக்கு வரவழைத்து வலுவூட்டல் மற்றும் பயிற்சி வழங்கல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கலாநிதி இஸ்மத் ரம்ஸி மலாயப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டு இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் உதவியுடன் எமது நாட்டின் சகல சமூக மாணவர்களுக்கும் உயர்க்கல்வியை வழங்குவதற்காக ஒத்துழைப்பு வழங்கி வருவதும் குறிப்பிடத்தத்தது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...