காசாவிலுள்ள அரசாங்க ஊடக நிலையம் விடுத்துள்ள அறிவித்தலின் படி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் காசா மக்களை தங்களது இருப்பிடங்களை விட்டு பலாத்காரமாக வெளியேற்றி அப்பிரதேசங்களை குண்டு வீசி தகர்க்கின்றது.
இவ்வாறு 48 தடவைகளுக்கு மேல் தாக்குதல் நடத்தி 48 மனித படுகொலைகளை அரங்கேற்றி இருக்கின்றது இஸ்ரேலிய இராணுவம்.
இந்த கொடூரத் தாக்குதலானது மனித இனத்திற்கு அவமானத்தை தருகின்ற ஒரு செயல் என்பதை நாம் சர்வதேச சமூகத்திற்கும் உலகளாவிய மக்களுக்கும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம் என்று குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.