இன்சைட் நிறுவனத்தின் முதல் நிகழ்நிலை சர்வதேச ஆராய்ச்சி மாநாடு!

Date:

இன்சைட் இன்ஸ்டிட்யூட் ஒஃப் மெனேஜ்மென்ட் எண்ட் டெக்னாலஜி, இலங்கையை தளமாகக் கொண்ட ஒரு கல்வி நிறுவனமாகும்.

அது ‘நிலைபேறான வளர்ச்சியில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு’ என்ற மகுடத்தில் தனது முதல் சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டை கடந்த (21) ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழ்நிலையில் ( Online) நடத்தியது.

இம்மாநாடு இந்தியா, மலேசியா, பங்களாதேஷ், புரூனை, ஆஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா மற்றும் இலங்கையில் இருந்து ஆய்வாளர்களை ஈர்த்தது, அவர்கள் ஆறு கருப்பொருள்களின் கீழ் பல உயர் திறன் கொண்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

மாநாட்டிற்கென கிடைக்கப்பெற்ற மொத்த ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கை 94 ஆகும். மாநாட்டின் மீளாய்வுக் குழு அவற்றிலிருந்து ஆய்வுக் கட்டுரைகளின் தலைப்பு, ஆய்வு முறை, ஆய்வு முடிவுகள் என்பவற்றைப் பரிசீலித்து மாநாட்டில் முன்வைக்கப்படத் தகுதியானவையாக 34 ஆய்வுகளை மட்டும் தேர்ந்தெடுத்தது.

இந்தத் தேர்வு இரட்டை குருட்டு மதிப்பாய்வு செயல்முறை (Double Blind Review)மூலம் செய்யப்பட்டது.

மாநாட்டு நிகழ்ச்சிகளை ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து பொறியியலாளர் முஹம்மத் பஸ்லி வழிநடாத்தினார்.

அவர் மாநாட்டின் தொடக்க நிகழ்வில் உலகம் முழுவதிலுமிருந்து ஸூம் மூலம் இணைந்த ஆய்வாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களை வரவேற்றார். மாநாட்டின் ஆறு கருப்பொருள்கள் பற்றிய விளக்கத்தையும் அவர் அளித்தார்.

தொழில்நுட்ப அமர்வுகள் காலையிலும் மாலையிலும் நடைபெற்றன. ஒவ்வொரு அமர்விலும் சமநேரத்தில் மூன்று ஆய்வு மன்றங்கள் இடம் பெற்றன.

உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற அறிஞர்கள் அவற்றுக்குத் தலைமை தாங்கினர். ஒவ்வொரு கருப்பொருளிலிருந்தும் சிறந்த ஆய்வு முன்வைப்பை தேர்ந்தெடுப்பதற்காக ஆறு தலைவர்களும் சுயாதீன நீதிபதிகளும் குழுவில் இணைந்தனர்.

கருப்பொருள் 1: தகவல் தொழில்நுட்பம் – தலைவர்: பேராசிரியர் ருவன் அபேசேகர (துணைவேந்தர், பிரிட்டிஷ் கொலிஜ் ஒப் எப்ளைடு ஸ்டடீஸ்(BCAS)

கருப்பொருள் 2: பொறியியல் தொழில்நுட்பம் – தலைவர்: பேராசிரியர் பார்த்திபன் ராஜேந்திரன் (இணைப் பீடாதிபதி(கல்வி), எலக்ட்ரிக்கல் மற்றும் கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் துறை, மொனாஷ் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா)

கருப்பொருள் 3: சுகாதாரத்தில் தொழில்நுட்ப தலையீடுகள் மற்றும் பயன்பாடுகள் – தலைவர்: டாக்டர் மகாரிம் ஹமீட் ( மகப்பேறு சிறப்புத்துறை மருத்துவர் – ஆதார வைத்தியசாலை, கம்புருபிட்டிய)

கருப்பொருள் 4: தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலை உணர்தல் – தலைவர்: டாக்டர் குமார் கே (இணை பேராசிரியர், மென்பொருள் அமைப்புகள் துறை, வேலூர் தொழில்நுட்ப நிறுவனம், இந்தியா)

கருப்பொருள் 5: சுற்றுச்சூழலில் தொழில்நுட்பத் தலையீடுகள் மற்றும் பயன்பாடுகள் – தலைவர்: திரு. ரீஸா யெஹியா (கட்டிடக் கலைஞர் மற்றும் நிலைத்தன்மை ஆலோசகர்)

கருப்பொருள் 6: விவசாயம் மற்றும் உணவுத் தொழிலில் தொழில்நுட்பத் தலையீடுகள் மற்றும் பயன்பாடுகள் – தலைவர்: பேராசிரியர் எம்.ஐ.எம். மௌஜூத் (பயோ சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் பேராசிரியர், விவசாய பீடம், பேராதனை பல்கலைக்கழகம்)

அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் பர்டியூ பல்கலைக்கழக இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி பீடத்தின் இயந்திரவியல் துறை பேராசிரியரான ராஸி நாளிம் தொடக்க உரையை நிகழ்த்தினார்.

வெப்ப இயக்கவியல் நிபுணரான பேராசிரியர் நாளிம், வெப்ப இயக்கவியல் அடிப்படையிலான நிலைத்தன்மை தீர்வுகள் பற்றி வெப்ப இயக்கவியலின் முதல் மற்றும் இரண்டாவது விதிகளை மேற்கோள் காட்டி, உரை நிகழ்த்தினார்.

 

Popular

More like this
Related

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...