இன்று முதல் முட்டை விலைகளில் மாற்றம்!

Date:

சதொச விற்பனை நிலையத்தின் ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டை ஒன்றின் விலை இன்று முதல் 43 ரூபாவாக அதிகரிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

VAT அதிகரிப்பால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டையை 35 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியாததால் சதொச விற்பனை நிலையங்கள் முட்டை விற்பனையை மட்டுப்படுத்தியுள்ளன.
அதன்படி சதொச விற்பனை நிலையங்களில் முட்டைக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலில், சந்தையில் உள்நாட்டு முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
அதன்படி, நாரஹேன்பிட பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று வெள்ளை மற்றும் சிவப்பு முட்டை ஒன்று 52 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

மேலும் சந்தையில் உள்நாட்டு முட்டைகள் மற்றும் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு இல்லை என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளனர்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...