எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி 76 வது சுதந்திர தின ஒத்திகையை முன்னிட்டு கொழும்பு – காலி முகத்திடலைச் சூழவுள்ள பகுதியில் வாகனப் போக்குவரத்தை மட்டுப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
இந்த விசேட போக்குவரத்து திட்டம் இன்று முதல் அமுலுக்கு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெப்ரவரி 03ஆம் திகதி வரை இந்த விசேட போக்குவரத்து தடவைகள், வீதி மூடல் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று முதல் பிப்ரவரி 2ஆம் திகதி வரை காலை 06 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலான காலப்பகுதியில் பயிற்சி நடைபெறும்.
மேலும், பெப்ரவரி 03ஆம் திகதி பிற்பகல் 02.00 மணி தொடக்கம் பெப்ரவரி 04ஆம் திகதி நிகழ்வு முடியும் வரை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலில் இருக்கும்.
இந்த காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.