இரு நட்பு நாடுகளுக்கும் மகிழ்ச்சியான ஆண்டாகட்டும் – சவூதி அரேபியா தூதரகத்தின் புத்தாண்டு வாழ்த்து

Date:

அனைவருக்கும் அன்பான இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, எதிர்காலம் சிறந்ததாக அமைய வேண்டும் என இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில் புதிய  ஆண்டானது கடந்த ஆண்டுகளை விடவும் செழிப்பானதாக அமைய வேண்டும் .

2024 புத்தாண்டின் வருகையானது அமைதி, நல்லிணக்கம் மற்றும் செழுமைக்கான எதிர்பார்ப்பு மற்றும் அபிலாஷைகளை எமக்கு அளிக்கிறது.

இந்த சந்தர்ப்பத்தில், இலங்கை மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆண்டு அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, புதிய இலக்குகள், அடைவுகள், மற்றும் புதிய உத்வேகங்களையும் கொண்டு வரட்டும்.

இரு நட்பு நாடுகளின் மக்களுக்கும் முன்னேற்றம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியுடன் கூடிய ஒரு ஆண்டாக வருகின்ற ஆண்டு அமைய வாழ்த்துகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...