இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் முக்கிய செயற்பாட்டாளராக ஹலால் கவுன்சில் அங்கீகரிக்கப்பட்டது!

Date:

ஹலால் சான்றுறுதிப் பேரவை (HAC) ஆனது, 31ஆவது NCE ஏற்றுமதி விருதுகளில், மதிப்புமிக்க தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதன் மூலம், தொடர்ச்சியாக 2ஆவது வருடமாக இவ்விருதை பெற்றுள்ளது.

இது இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் HAC வகிக்கும் முக்கிய பங்களிப்புக்கு ஒரு சான்றாக அமைகின்றது.

கடந்த 2023 டிசம்பர் 08ஆம் திகதி இடம்பெற்ற இவ்விழாவில், தேசிய ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினால் (NCE ) இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

2048ஆம் ஆண்டை நோக்கிய அரசாங்கத்தின் தூரநோக்கின் அடிப்படையில், நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்ற ஏற்றுமதித்துறையில், இலங்கை ஏற்றுமதியாளர்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றனர்  என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசிய ஏற்றுமதி மூலோபாய நடவடிக்கையை செயற்படுத்துவதில் HAC கொண்டுள்ள பங்களிப்பின் மூலம், இலங்கையின் ஹலால் சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகளின் ஏற்றுமதிகள் 2022 இல் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதோடு, 2025 ஆம் ஆண்டளவில் உலகளாவிய சந்தையில் ஹலால் சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகளின் ஏற்றுமதிகள் 1.67 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என கணிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், விரிவடைந்து வரும் உலகளாவிய ஹலால் உணவுத் தொழில்துறையில் ஈடுபடுவதற்கு, இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு HAC வசதியை ஏற்படுத்துகிறது.

அந்த வகையில், இலங்கையின் ஏற்றுமதியை ஊக்குவிக்க 2023 முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளில் HAC ஈடுபட்டிருந்தது.

ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்களின் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, HAC  ஆனது இலங்கை வர்த்தகப் பிரதிநிதிகளுடன், 2023 ஓகஸ்ட் மாதம் தாய்லாந்திற்கு சென்றது.

ஏற்றுமதி மூலமான டொலர் வருமானத்தை வலுப்படுத்துத்தல் மற்றும் தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் ஆகிய விடயங்களை இந்த விஜயம் நோக்கமாகக் கொண்டிருந்தது.

2023 செப்டம்பர் மாதம், மலேசியாவில் நடைபெற்ற உலகளாவிய ஹலால் மாநாட்டில் பங்கேற்றதன் மூலம், முக்கியமான ஏற்றுமதி நாடுகளின் அரச அதிகாரிகள் மற்றும் சான்றளிக்கும் அமைப்புகள் உள்ளிட்ட 47 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய பங்குதாரர்கர்ளுடனான உறவுகளை HAC மேம்படுத்தியிருந்தது.

ISO 17065 & GSO 2055-2:2015 தரநிலைகளுக்கு அங்கீகாரம் பெற்றுள்ளது HAC , உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் ஆகியன, சர்வர்தேச கொள்வனவாளர்களுக்கு உலகளாவிய ரீதியிலான கட்டாயமான அம்சங்கள் என்பதை அடையாளப்படுத்துகிறது. HAC இன் தரநிலைகள், உணவு உற்பத்தி மற்றும் பதப்படுத்தலின் அனைத்துத் நிலைகளிலும் கட்டுப்பாடுகளை நிறுவுவதனை உற்பத்தியாளர்ளுக்கு கட்டாடயப்படுத்துத்வதோடு, உணவுச் சுகாதாரத்தையும் வலியுறுத்துத்துகின்றது. இலங்கையின் உணவு மற்றும் பானங்கள் (குரூடீ) தொழிற் துறையானது, சர்வர் தேச ஹலால் தரத்திற்கு ஏற்ப அமைவதற்கான திறனை கட்டிட்யெழுப்புவதற்காக, HAC முன்னெடுத்துள்ள முயற்சியின் ஒரு பகுதியாக நுண், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் (MSME), பிரபல உணவு வர்த்தக நாமங்கள், பாரிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களைச் சேர்ந்த 1000 நபர்களை இதுவரை அது உள்வாங்கியுள்ளது.

ரஷ்யா, அமெரிக்கா, ஜேர்மர்னி, நெதர்லாந்து, இந்தியா, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட முஸ்லிம் அல்லாத பெரும்பான்மை நாடுகளில், இலங்கையின் ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்கள் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ளன.

அத்துடன் ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், அசர்பைஜான் போன்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில், இலங்கையின் ஹலால் சான்றளிக்கப்பட்ட ஏற்றுமதிப் பொருட்களை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்வதை காணக்கூடியதாக உள்ளன.

HAC இன் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆகிஃப் ஏ. வஹாப் இது பற்று கருத்துத் தெரிவிக்கையில்,

‘இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான எமது சுயாதீனமான முயற்சிகளை உறுதிப்படுத்தும் வகையில், நாம் பெற்றுள்ள இந்தத் தொழில்துறை பாராட்டை மிகத் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறோம்.

தாய்லாந்து, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ளதைப் போன்று, ஹலால் தொடர்பான தெளிவான அரச கொள்கை ஸ்தாபிக்கப்படுவது முக்கியமானதாகும்.

இதன் மூலம் நிலைபேறான தன்மையை உறுதி செய்து, இலாபகரமான உலகளாவிய ஹலால் சந்தை மூலம் இலங்கை ஏற்றுமதியாளர்கள் மேலும் பலன்களை அடையச் செய்யலாம்’ என்றார்.

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...