இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக மீண்டும் கௌசல்யா நவரத்ன

Date:

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவராக மீண்டும் சிரேஷ்ட சட்டத்தரணி கௌசல்யா நவரத்ன, பதவியேற்கவுள்ளார்.

2024-2025 ஆம் காலக்கட்டத்துக்கு அவர் போட்டியின்றி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, BASL இன் செயலாளராக சதுர கல்ஹேனவும் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.

எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 50 ஆவது பட்டமளிப்பு விழாவில் இவர்கள் உத்தியோகப்பூர்வமாக தமது கடமைகளை பெறுப்பேற்கவுள்ளனர்.

BASL இன் 2024-2025 ஆம் ஆண்டிற்கான தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கான வேட்புமனுக்கள் நேற்று (10) சொலிசிட்டர் ஜெனரல் இந்திக தேமுனி டி சில்வாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நவரத்ன இரண்டாவது முறையாக BASL இன் தலைவர் பதவிக்கு வேட்புமனுவை சமர்ப்பித்திருந்த நிலையில், கல்ஹேனவும் செயலாளர் பதவிக்கான வேட்புமனுக்களை கையளித்திருந்தார்.

இந் நிலையில் வேறு வேட்பு மனுக்கள் இல்லாதமையினால் இவர்கள் இருவரும் போட்டியின்றி குறித்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...