உயர்தர பரீட்சை நிலையங்களில் வெளிச்செயற்பாடுகளை நிறுத்துமாறு வேண்டுகோள்!

Date:

இடம்பெற்றுக்கொண்டிருக்கும் க.பொ.த உயர்தர பரீட்சை நிலையங்களில் வெளிச் செயற்பாடுகளை நிறுத்துமாறு பரீட்சைத் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் 2302 பரீட்சை நிலையங்களில் 04ஆம் திகதி தொடக்கம்
31ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைகள் நடைபெற ஏற்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பரீட்சை நடைபெறும் இக்காலப்பகுதியில் பரீட்சார்த்திகளுக்கு இடைஞ்சல் ஏற்படும் விதமான எவ்வித செயற்பாடுகளையும் பரீட்சை நிலையங்களில் ஏற்பாடு செய்ய வேண்டாம் என அனைத்துத் பாடசாலை அதிபர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் இதற்கு புறம்பாக, பரீட்சை நிலையங்களாக செயற்படும் சில பாடசாலைகளில், பரீட்சார்த்திகளுக்கு இடைஞ்சல் ஏற்படும் விதமாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

எனவே பரீட்சை நிறைவுறும் வரை  இடைஞ்சல் ஏற்படும்
விதமாக எவ்வித செயற்பாடுகளையும் பரீட்சை நிலையங்களில் நடாத்த
வேண்டாம் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...