உயர்தர விவசாய விஞ்ஞான மாணவர்களுக்கான அறிவிப்பு!

Date:

ரத்துச்செய்யப்பட்ட உயர்தர விவசாய விஞ்ஞான வினாத்தாளுக்குப் பதிலாக நடைபெறவுள்ள புதிய பரீட்சைக்குத் தோற்றுவதற்கான அனுமதி அட்டையை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும், அது கிடைக்காத பட்சத்தில் இணையத்தளத்திற்கு பிரவேசித்து அனுமதி அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், பரீட்சார்த்திகள் ரத்து செய்யப்பட்ட பரீட்சைக்கு தோற்றிய அதே பரீட்சை நிலையத்தில் புதிய வினாத்தாளுக்கு தோற்றினால், அனுமதி அட்டை தேவையில்லை என்றும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு உயர்தர விவசாய வினாத்தாள் கசிந்துள்ளதாக தெரியவந்ததையடுத்து, வினாத்தாளை முழுமையாக ரத்து செய்ய பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்தது.

அதன்படி அந்த பாடத்தை மட்டும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி விசேட பரீட்சையாக நடத்த திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

விவசாய வினாத்தாளின்  இரண்டாம் பகுதி காலை 08.30 மணி முதல் 11.40 மணி வரையிலும், முதல் பகுதி பிற்பகல் 01 மணி முதல் 3 மணி வரையிலும் நடைபெறும்.

மேலதிக தகவல்களை பரீட்சை திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...