உலகில் இஸ்லாத்தை பின்பற்றும் மக்கள் தொகை அதிகரிப்பு: 2070 ஆம் ஆண்டு 70 சதவீதமாக அதிகரிக்கும்

Date:

உலகில் வேகமாக வளர்ந்து வரும் சமயமாக இஸ்லாம் இருப்பதுடன் எதிர்வரும் 2070 ஆம் ஆண்டுக்குள் இஸ்லாத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை உலகில் அதிகமாக இருக்கும் என பல தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015 ஆம் ஆண்டை விட எதிர்வரும் 2060 ஆம் ஆண்டளவில் உலக முஸ்லிம் மக்கள்தொகை 70 சதவீதமாக அதிகரிக்கும் என பியூ என்ற ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய பெருங்கடலில் இருக்கும் மாலைதீவில் 100 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர். அதேபோல், ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் மொத்த மக்கள் தொகையில் 99.8 சதவீதம் பேர் முஸ்லிம்கள்.

சோமாலியாவின் மக்கள் தொகையில் 99 சதவீதம் பேர் முஸ்லிம்கள். ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் கூட 99 சதவீதம் பேர் இஸ்லாத்தை பின்பற்றுகின்றனர்.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தோனேசியா முதலிடத்தில் உள்ளதுடன் பாகிஸ்தான், இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகள் அடுத்த இடங்களில் உள்ளன.

மாலைதீவுகள் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ் மற்று அன்றைய கால தென் இந்திய பகுதி அரசர்களால் ஆளப்பட்டது. பின்னர் மாலைதீவு பௌத்தத்தின் நாடாக மாறியது.

சோழ மன்னர்களும் மாலைதீவை ஆண்டனர். அதன் பின்னர் படிப்படியாக மாலைதீவு முஸ்லிம் நாடாக மாற ஆரம்பித்தது. மாலைதீவின் உத்தியோகபூர்வ மதம் இஸ்லாம். மாலைதீவில் முஸ்லிம் அல்லாதவர்கள் குடியுரிமை பெற முடியாது.

இந்தோனேசியாவிற்கு அடுத்தபடியாக பாகிஸ்தானில் அதிகளவான முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 18,68,90,601, இதில் 18 கோடியே 25 லட்சத்து 92 ஆயிரம் பேர் முஸ்லிம்கள்.

பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை சுமார் 22,10,000 ஆகவும், சீக்கியர்கள் 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களாகவும் உள்ளனர். கிறிஸ்தவர்கள் சுமார் 18 லட்சத்து 73 ஆயிரம், அஹ்மதியர்கள் 1,88,340. சுமார் 4000 பார்சிகள் உள்ளனர்.

இந்த பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 20 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 17.22 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 14.2 சதவீதமாகும்.

முஸ்லிம் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

பங்களாதேஷ் நான்காவது இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் 15 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்கள் வாழ்கின்றனர்.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியா ஐந்தாவது இடத்தில் உள்ளதுடன் அங்கு இஸ்லாத்தை பின்பற்றும் 11 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர்.

இதற்கு அடுத்ததாக எகிப்தில் 11 கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ஈராக், துருக்கி ஆகிய நாடுகள் அடுத்த இடங்களில் உள்ளன.

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...