முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டிசில்வா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினர் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்திருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போதே முஜிபுர் ரஹ்மான சுகயீனமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்க்கட்சித் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.