ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரித திசேரா இன்று(04) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தார்.
2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர் தயாஸ்ரித திசேரா அரச சொத்துக்கள் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்டிருந்தார்.
ஜனாதிபதித் தேர்தல் இவ்வாண்டு இறுதியில் நடைபெற உள்ள பின்புலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் பல முக்கிய உறுப்பினர்கள் இணைந்து வருகின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் த சில்வா, புத்தாண்டு தினத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்திருந்தார்.