சந்தையில் கரட் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதன் காரணமாக பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும் கரட் மூட்டைகளை பாதுகாக்க காவலாளிகளை ஈடுபடுத்த நேரிட்டுள்ளது.
கரட் மூட்டைகளை காவல் காக்கும் காவலாளி ஒருவருக்கு ஆயிரத்து 500 ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாக மரக்கறி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு கிலோ கிராம் கெரட் 2 ஆயிரம் ரூபாவுக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டதுடன் தற்போது அந்த விலையானது ஆயிரத்து 600 வரை குறைந்துள்ளது.
கரட் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக பொருளாதார மத்திய நிலையங்களுக்கு தினசரி வரும் வர்த்தகர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.