எரிபொருள் விலையை சிபேட்கோ நிறுவனம் அதிகரித்துள்ள நிலையில், லங்கா IOC மற்றும் சினோபெக் நிறுவனங்களும் அதிகரித்துள்ளன.
சிபேட்கோ நிறுவனத்தின்விலை அதிகரிப்புக்கு அமைய, லங்கா IOC நிறுவனமும் விலையை அதிகரித்துள்ளது.
எனினும், சினொபெக் நிறுவனம் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளுக்கு சலுகை வழங்கியுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டருக்கு 3 ரூபா சலுகை வழங்கியுள்ளது.
ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலையை 17 ரூபாவினால் அதிகரித்துள்ளதுடன், புதிய விலையாக 363 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒட்டோ டீசல் ஒரு லீட்டருக்கான விலையை 26 ரூபாவினால் அதிகரித்துள்ளதுடன், புதிய விலையாக 355 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.