குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம்: சபையில் முதல் அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர்

Date:

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம் செய்ய முடியும் என சட்டமா அதிபர் தம்மிடம் விளக்கம் அளித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்டதன் பின்னரே இந்த முடிவுக்கு வந்ததாகவும் சபாநாயகர் அபேவர்தன அறிவித்தார்.

புத்தாண்டின் முதல் பாராளுமன்ற அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. இதன்போது வெளியிட்ட சபாநாயகரின் அறிவிப்புகளிலேயே இவ்வாறு கூறினார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேலும் சுட்டிக்காட்டியதாவது,

“1953 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க பாராளுமன்ற சிறப்புரிமைகள் சட்டத்தின் 66 மற்றும் 67 ஆம் பிரிவுகள், குற்றவியல் நடைமுறையின் பிரிவு 16 (1) மற்றும் நிலையியற் கட்டளைகள் 77(1), 77(2) மற்றும் 77 ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சட்டமா அதிபர் இந்த முடிவுக்கு வந்துள்ளார்.

சட்டமா அதிபரின் முடிவின்படி எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டால் அவர் ஒரு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரை இடைநீக்கம் செய்யப்படலாம்” என சபாநாயகர் அறிவித்தார்.

இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, சபாநாயகருக்கு ஆலோசனை வழங்க சட்டமா அதிபருக்கு உரிமை இல்லை. அத்துடன், இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோரின் நடத்தை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகள் ஏன் சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இதே கேள்வியை எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், “சபாநாயகருக்கு ஆலோசனைகளை வழங்கவும் முடிவுகளை எடுக்கவும் சட்டமா அதிபருக்கு உரிமை உள்ளது. சபாநாயகரின் உரிமைகளுக்கு தயவு செய்து மதியுங்கள்.“ என்றார்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...