சனத் நிஷாந்தவுக்கு இறுதி அஞ்சலி, திரண்ட பொதுமக்கள்: பெருமளவு பொலிஸார் குவிப்பு

Date:

உயிரிழந்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிச் சடங்குகள் தற்போது ராஜதந்தலுவ திருக்குடும்ப தேவாலய மயானத்தில் நடைபெற்று வருகின்றது.

அவரது உடல் ஆராச்சிக்கட்டுவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு தற்போது ராஜதந்தலுவ திருக்குடும்ப தேவாலயத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அதிக எண்ணிக்கையிலான மக்கள் தேவாலயத்துக்கு அருகில் கூடியுள்ளனர்.

மேலும், இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரதேச மக்கள், மஹிந்த ராஜபக்ச, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் பலர் வருகை வந்த வண்ணம் உள்ளனர்.

இதேவேளை வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர்   இறுதிக் கிரியைகளுக்காக பெருமளவான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வடமேற்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் நிலையங்களில் இருந்து 380 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

48 வயதான சனத் நிஷாந்த நான்கு பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நம்பிக்கையை நசுக்கிய வரவு–செலவுத்திட்டம்: புத்தளம் மரிக்காரின் கவிதை வரிகள்!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வரவு–செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி ஒதுக்கியுள்ள நிதித்திட்டங்கள் குறித்து...

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (12) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

திரைப்பட கூட்டுத்தாபனத்தை மாற்றியமைக்க திட்டம்: அமைச்சரவை அனுமதி

இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை...