மாணவி ஒருவரை பகிடிவதைக்குள்ளாக்கியமை தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 14 ஆம் திகதி சமனலவெவ பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து குறித்த மாணவர்கள் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மொழியியல் கற்கை பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்களே இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.