சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்த தம்மிக்க!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் நோக்கத்துடன் காய் நகர்த்தும் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா சிறுபான்மை கட்சிகளுடன் அரசியல் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

”எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இரண்டு தமிழ் கட்சிகள் மற்றும் ஒரு முஸ்லிம் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளேன்.

பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இது பற்றிய கூடுதல் விவரங்களை தற்போது தெரிவிக்க முடியாது” எனவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக களமிறங்கும் நோக்கில் வர்த்தகர் தம்மிக்க பேரேரா அக்கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறார்.

ஆனால், அவ்வாறான பேச்சுவார்த்தைகள் எதுவும் இதுவரை இடம்பெறவில்லையென அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...