அணிசேரா நாடுகளின் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றவுள்ளார்.
அதன்படி பகிரப்பட்ட உலகளாவிய செழுமைக்கான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் என்பது இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருளாகும்.
Grand Welcome for President Ranil Wickremesinghe in Uganda pic.twitter.com/3ZPmTmfBvU
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) January 18, 2024
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று பிற்பகல் உகண்டா சென்றிருந்ததுடன் அங்கு அந்நாட்டு காணி மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளினால் ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழு வரவேற்கப்பட்டிருந்தனர்.
மேலும் அணிசேரா நாடுகளின் தலைவர்களின் 19வது உச்சி மாநாடு உகண்டாவில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.