தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரானார் சி.சிறீதரன்!

Date:

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று காலை திருகோணமலையில் இடம்பெற்றிருந்தது.

வாக்கெடுப்புகள் நிறைவு பெற்றிருந்த நிலையில், சற்று முன்னர் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் சிறிதரனுக்கு ஆதரவாக 186 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. சுமந்திரன எம்.பிக்கு 137 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தத.

இதன்படி 50 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மொத்தம் 321 வாக்குகள் பதிவுசெய்யப்பட்டிருந்தன. இதில் கட்சியின் தற்போதைய தலைவரான மாவை சேனாதிராஜா நடுநிலை வகித்துள்ளார்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் வாக்கெடுப்பை புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...