நாடு முழுவதும் இருளில் மூழ்கும் மூழ்கும் அபாயம்: மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்!

Date:

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக நாளை (03) முதல் மூன்று நாட்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சட்டமூலத்தை உடனடியாக மீளப் பெறுமாறு மின்சக்தி அமைச்சருக்கு அறிவிக்கவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சாரசபையை ஜனாதிபதியுடன் சேர்ந்து மின்சக்தி அமைச்சர் விற்பனை செய்வதற்கு விரும்புவதாகவும், குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தன்னிச்சையாக நிறைவேற்றப்படுமாயின் பாரிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக எதிர்வரும் மூன்று நாட்களுக்கு பாரியளவிலான கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்!

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில்...

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...