வட் வரி செலுத்த வேண்டிய அனைவரும் முறையாக அந்த கொடுப்பனவுகளை செய்தால், செலுத்தப்படும் வட் வரி சதவீதத்தை குறைக்க முடியும் என அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வட் செலுத்துதல்களை முறையாகச் செய்தால் வருமானம் பெருகும் என்றும், அதன் விளைவாக வற் வரியை குறைக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
எனவே வட் செலுத்த வேண்டிய அனைவரும் வற் செலுத்துவதற்கு பங்களிக்க வேண்டும்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வற் செலுத்த வேண்டியவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் வற் சதவீதத்தைக் குறைக்க முடியும் என்றும், வட் செலுத்தாத வர்த்தகர் வாடிக்கையாளர்களிடமிருந்து வட் வசூலித்தால், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அது தொடர்பான அறிவிப்பை வழங்கும் முறையை ஆரம்பிக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.