நாட்டில் 34 இலட்சம் குடும்பங்களின் வருமானம் வீழ்ச்சி!

Date:

பொருளாதார நெருக்கடி காரணமாக 2022 மார்ச் மாதத்திலிருந்து இலங்கையில் 34,48,000 குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கைகள் வெளிப்படுத்துவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அதன்படி, மொத்த குடும்ப அலகுகளில் 60.5% வருமானம் குறைந்துள்ளதாக அவர் கூறினார்.

குறிப்பாக பெருந்தோட்ட துறையில் வருமானம் அதிகம் குறைந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 1,70,000 குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ளது.

இரண்டாவதாக, கிராமப்புற மக்களின் வருமானம் அதிக வீழ்ச்சியைக் காட்டுகிறது.

கிராமப்புறங்களில் கிட்டத்தட்ட 45,00,000 குடும்பங்கள் இருப்பதாகவும், 27,00,000 குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

நாட்டின் நகர்ப்புற மக்கள் தொகை சுமார் 3.6 மில்லியன். இதில் ஏறக்குறைய 9,50,000 குடும்பங்கள் இருப்பதாகவும், அதில் 5,00,000 குடும்பங்கள் வருமானத்தில் சரிவைக் காட்டுவதாகவும் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பலஸ்தீனத்திற்கான உலக ஒற்றுமை பேரணி கொழும்பில்: ஆசிய நாடுகள் இணையும் மனிதாபிமானப் போராட்டம்!

கொழும்பில் ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விஹார...

இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் குமார ஜயகொடி தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின்...

முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைது செய்ய உத்தரவு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித...