நாரம்மல துப்பாக்கிச் சூடு: உதவி பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்!

Date:

நாரம்மல பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த லொறி சாரதியின் உறவினர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா நட்டஈட்டை பொலிஸார் வழங்கியுள்ளனர்.

உயிரிழந்த சாரதியின் அலவ்வ பகுதியில் உள்ள வீட்டில் வைத்து பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இந்தத் தொகையை வழங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய உதவி பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த இருவரும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

உத்தரவை மீறி ஓட்டிச் சென்ற லொரியை துரத்திச் சென்று அதனை நிறுத்தியபோது, உதவி பொலிஸ் பரிசோதகரின் துப்பாக்கி வெடித்தில் சாரதி உயிழந்தார்.

இது தொடர்பாக, உதவி பொலிஸ் பரிசோதகர்  கைது செய்யப்பட்டு, நாரம்மல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...