பாராளுமன்றத்தில் இன்று 23ஆம் திகதியும் நாளை 24ஆம் திகதியும் நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் (online safety bill) இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறுகிறது.
அரசாங்கம் இந்தச் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றி இலங்கையில் செயல்படும் இணைய ஊடகங்களை கட்டுப்படுத்த முற்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளன.
இந்நிலையில், விவாதத்தை நடத்தக்கூடாதென எதிர்க்கட்சிகள் விவாதத்தை நடத்துவதா? இல்லையா? என வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தன. அதன் பிரகாரம் சபாநாயகரால் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன் பிரகாரம் விவாதத்தை தொடர்ந்து நடத்த ஆளுங்கட்சி ஆதரவாக வாக்களித்ததுடன், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் எதிராக வாக்களித்தன.
விவாதத்தை நடத்த ஆதரவாக 83 வாக்குகளும் எதிராக 50 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிராக வாக்களின.