பணயக் கைதிகளுடன் சென்ற ரஷ்ய இராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது: 74 பேரின் நிலை என்ன?

Date:

65 உக்ரைன் பணயக் கைதிகளுடன் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் விபத்தில் சிக்கி நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது.

பணயக் கைதிகளுடன் சென்ற இராணுவ விமானம் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து இருநாட்டு எல்லையிலும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் எப்போதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், ரஷ்யாவால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் பணயக் கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் போடப்பட்டது.

அதன்படி, ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் இருந்து 65 உக்ரைன் பணயக் கைதிகளுடன் இராணுவ விமானம் புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே உக்ரைன் எல்லைப்பகுதியில் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது.

கீழே விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்த வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விமானத்தில் உக்ரைன் பணயக் கைதிகள் 65 பேர் மற்றும் 6 விமான ஊழியர்கள் உட்பட மொத்தம் 74 பேர் பயணம் மேற்கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், 74 பேரின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை.

உக்ரைன் பணயக் கைதிகளுடன் சென்ற ரஷ்ய விமானத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்தும், விபத்துக்கான உண்மையான காரணம் குறித்தும் ரஷ்ய அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உக்ரைன் பணயக் கைதிகளுடன் சென்ற இராணுவ விமானம் விபத்தில் சிக்கியதால் இருநாட்டு எல்லையில் மேலும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...