பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது தொடர் விசாரணை

Date:

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று (30) தொடர்ந்து மூன்றாவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று தீர்ப்பளிக்குமாறு கோரி இதுவரை 31 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர், மாற்றுக் கொள்கைக்கான நிலையம், சோசலிச இளைஞர் சங்கம், முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் துமிந்த நாகமுவ, இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் , இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

உத்தேச மசோதாவின் சில சரத்துகள் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக இருப்பதால், இந்த மனுக்கள், பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளாலும், சர்வஜன வாக்கெடுப்பு மூலமாகவும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை இன்று தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து நடைபெறும் நிலையில், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, ஏ. எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய ஐவர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணை இடம்பெற்றது.

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...