பலா, ஈரப்பலா, கிழங்கு வகைகளின் விலைகளும் உயர்வு !

Date:

சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ள நிலையில், பலா, ஈரப்பலா, கிழங்கு மற்றும் வற்றாளை போன்ற உணவுப் பொருட்களின் விலையையும் சில வர்த்தகர்கள் அதிகரித்துள்ளனர்.

மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளமையால் நுகர்வோர் இவ்வாறான காய்கறிகளை கொள்வனவு செய்வதில் அதிகம் நாட்டம் காட்டி வருகின்றனர்.

இந்தநிலையில், பலா, வாழைப்பூ, வாழைக்காய், மாம்பழம் மற்றும் கீரை வகைகள் என்பன தற்போது அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன

அதன்படி, ஈரப்பலா காய் ஒன்று 180 ரூபாவுக்கும், வாழைக்காய் 280 ரூபாவுக்கும், வாழைப்பூ 130 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

அத்துடன், பொன்னாங்கண்ணி கீரையும் வல்லாரை கீரையும் 60 ரூபா முதல் 80 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்கப்படுகிறது.

Popular

More like this
Related

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

டெங்கு அபாயம் அதிகமுள்ள வலயங்களை இலக்காகக் கொண்டு இன்று (06) விசேட...