தென் மாகாணத்தின் வெலிகம பகுதியிலுள்ள பிரபலமான அரபுக்கல்லூரி ஒன்றில் கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆசிரியர் ஒருவரால் மாணவர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டதையடுத்து இது தொடர்பாக முறையான விசாரணை முடிவுறும் வரை கல்லூரியை தற்காலிகமாக மூடுவதற்கு முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் அவசர நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இது தொடர்பான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதில், மேற்படி சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களை விசாரணை செய்ய திணைக்களம் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே திணைக்களத்தின் விசாரணை முடியும் வரை இன்று முதல் தற்காலிகமாக கல்லூரியை மூடி பாதுகாப்பாக மாணவர்களை பெற்றோர்கள், பாதுகாவலர்களிடம் ஒப்படைக்குமாறும் திணைக்களத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.