பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரதான ரயில் மார்க்கத்தில் இன்று காலை முதல் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்று அம்பேபுஸ்ஸ தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொழினுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது
இதன் காரணமாக குறித்த மார்க்கத்தின் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.