பெப்ரவரியில் சுகாதார சேவைகள் முடங்கும் அபாயம் !

Date:

பெப்ரவரி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

மருத்துவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்க தீர்மானித்துள்ள 35,000 ரூபா போக்குவரத்து கொடுப்பனவை தங்களுக்கும் வழங்க வேண்டும் என கோரி, அவர்கள் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளனர்.

சுகாதார சேவையில் உள்ள 72 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்குபற்றிய விசேட கூட்டத்தில் இது ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சுகாதார அமைச்சு மற்றும் நிதி அமைச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பொது வைத்தியசாலைகளில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பை நடத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...