பெலியத்த துப்பாக்கி சூட்டு சம்பவம்: 6 விசேட பொலிஸ் குழுக்கள் நியமனம்

Date:

மாத்தறை – பெலியத்த பிரதேசத்தில் ஐந்து பேர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 6 விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (22) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெலியத்த பிரதேசத்தில் இன்று (22) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

 

 

Popular

More like this
Related

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு...