“இங்கு இழந்த உயிர்களைப் பற்றி நீங்கள் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், நீங்கள் உயிர்களை மதிக்க வேண்டும், மேலும் பாலஸ்தீனத்தில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும்” என்று ஒரு பெண் கூச்சலிட்டார்
ஆரம்பத்தில் ஒரு சிலர் மட்டும் கோஷமிட்ட போதும் பிறகு முழு சபையும் சேர்ந்து குரல் கொடுக்கத் தொடங்கினார்.
இதனையடுத்து பைடன் மக்களுக்கு சொன்ன பதில், உங்கள் உணர்வுகளை நான் புரிந்துகொள்கிறேன் மற்றும் காசாவில் அதன் நடவடிக்கைகளை குறைக்க இஸ்ரேலை தள்ள என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன்.
எவ்வாறாயினும், இஸ்ரேல் ஹமாஸ் போரில் 23,000 பேர் பலியாகியதுடன், பெரும்பாலும் பலஸ்தீனிய பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள்,பலியாகியுள்ளனர்.
பெருகிவரும் இறப்பு எண்ணிக்கை மற்றும் காசாவில் மனிதாபிமான நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், பைடன்நிர்வாகம் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பது குறித்து குறிப்பாக மக்களிடம் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.