பௌத்த தத்துவம் எனக் கூறி தவறான சித்தாந்தத்தைப் பரப்பிய 30 பேர் அடையாளம்!

Date:

சொர்க்கத்திற்கு செல்வதற்காக பூமியில் உயிர் துறக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தைப் பரப்பி ஏழு பேரை தற்கொலைக்கு தூண்டிய ருவான் பிரசன்ன குணரத்னவின் மூட நம்பிக்கை கும்பலுடன் நேரடியாக தொடர்புபட்ட முப்பது பேர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மற்றும் புலனாய்வு அமைப்புகளால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணையின்படி, இந்த குழு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் சாமானியர்களுக்கு மேலதிகமாக சில பிக்குகளும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

பொலன்னறுவை மற்றும் அம்பலாங்கொடை பிரதேசங்களில் பௌத்த தத்துவம் எனக் கூறி ருவன் பிரசன்ன என்ற நபர் சுமார் பத்து வருடங்களாக கட்டுக்கதைகளை பரப்பி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அவரைப் பின்பற்றுபவர்கள் என அடையாளம் காணப்பட்ட முப்பது பேரை மதவாத கருத்துக்களில் இருந்து விடுவிக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளதாக சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...

செப். 25 – ஒக். 01 வரை சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனம்!

சிறுவர் தினத்தை முன்னிட்டு செப். 25 – ஒக். 01 வரை...

இலங்கைக்கு 963 மில்லியன் யென் மானிய உதவியை வழங்கியது ஜப்பான் அரசு!

இலங்கையின் பால் உற்பத்தித் துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், கடற்படையின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு...

முஜாஹிதீன்களின் தலைவரும் உறுதிப்பாட்டின் சின்னமுமான உமர் முக்தாரின் தியாக நினைவு நாள்!

16.09.1931- 16.09.2025 முஜாஹிதீன்களின் தலைவராகவும் உறுதிப்பாட்டின் சின்னமாகவும் விளங்கிய உமர் முக்தார் 1862...