மின்சார கட்டணத்தை 3.3 வீதத்தினால் குறைக்குமாறு மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிந்துள்ளதாக ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, இலங்கை மின்சார சபை இந்த வருடம் 71,000 கோடி ரூபா இலாபம் ஈட்டுவதற்கு தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சார சபை 13,500 கோடி ரூபாவை மறைந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்காது செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், 0 முதல் 30 மின்சார அலகுகளை இடைப்பட்ட பாவனையாளர்களின் கட்டணத்தை ஒரு ரூபாவினாலும் மாதாந்த கட்டணத்தை 25 ரூபாவினாலும் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
அத்துடன், 31 முதல் 60 மின்சார அலகு வரை ஒரு மின்சார அலகுக்கான கட்டணம் 3 ரூபாவினாலும் மாதாந்த கட்டணம் 30 ரூபாவினாலும் குறைப்பதற்கு பரிந்துரைக்கட்டப்பதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.