முஸ்லிம் சமூகம் இணைந்து பயணிப்பதற்கான இரண்டாவது சந்திப்பு: ஒருங்கிணைப்பாளர்களும் நியமனம்!

Date:

இலங்கை முஸ்லிம் சமூக நிறுவனங்களின் தலைவர்களை உள்ளடக்கிய இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் (Islamic Unity Forum) இரண்டாவது கூட்டம் கடந்த புதனன்று (20) மாளிகாவத்தை ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில், முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களம், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, அகில இலங்கை சூபிச ஆன்மீகப் பேரவை, ஹித்மதுல் உலமா நலன்புரிச் சங்கம், அகில இலங்கை மஜாலிஸுல் உலமா, ஸெரன்திப் ஐக்கிய நிறுவனம், அகில இலங்கை வைஎம்எம்ஏ, பொரல்லை அஹதியா, கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம், கொழும்பு பெரிய பள்ளிவாசல், மீட்ஸ், மிஷ்காத் ஆய்வு நிலையம், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில், ஸலாமா, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் ஒன்றியம் ஆகிய 15 நிறுவனங்களைச் சேர்ந்த 26 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஹித்மதுல் உலமா நலன்புரிச் சங்கத்தின் உப தலைவர் மௌலவி எம்எஸ்எம் ஜிப்ரி (இல்மி) அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் ஸ்தாபகர்களுள் ஒருவரான பஹன மீடியாவின் முகாமைத்துவப் பணிப்பாளர் அஷ். எம்எஸ் அப்துல் முஜீப் (கபூரி) வரவேற்புரை நிகழ்த்தினார்.
நிகழ்வில் மௌலவி எம்எம் சிராஜுதீன் நஜாஹி (செயலாளர்,அகில இலங்கை மஜாலிஸுல் உலமா), அஷ். ஏஎன்எம் பிர்தௌஸ் மன்பஈ (தலைவர் செரண்டிப் ஐக்கிய நிறுவனம்), நஸார் காமில் (கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டப் பணிப்பாளர்,அகில இலங்கை வைஎம்எம்ஏ), அஷ். எம்எம்எம் முப்தி, (முஸ்லிம் சமய கலாசார திணைக்களம்), சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் ( தலைவர்,கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம்) எம்டிஎம் ரிஸ்வி (செயலாளர், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில்), அஷ். ரிபாஹ் ஹஸன் (அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா) ஆகியோர் இஸ்லாமிய ஐக்கியப் பேரவையை பலப்படுத்தும் வகையிலான கருத்துக்களை வழங்கினர். அஸ்ஸெய்யித் ஹஸன் மௌலானா அல்காதிரி நன்றியுரை நிகழ்த்தினார்.
இஸ்லாமிய ஐக்கிய பேரவையில் இணைந்திருக்கும் 29 அமைப்புக்களில் 15 அமைப்புக்களுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் அன்றைய தினம் நியமிக்கப்பட்டனர்.

1. முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களம் – அஷ்.எம்.எம்.எம். முப்தி
2. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா – அஷ். ரிஃபா ஹஸன்
3. அகில இலங்கை மஜாலிஸுல் உலமா – மௌலவி சிராஜுதீன் நஜாஹி
4. ஹித்மதுல் உலமா நலன்புரிச் சங்கம் – அஷ். எம். எச். முஹம்மத் இஹ்ஸானி
5. ஸெரன்தீப் ஐக்கிய பேரவை – அஷ். ஏஎன்எம் பிர்தௌஸ் மன்பஈ
6. அகில இலங்கை வைஎம்எம்ஏ – நஸார் காமில்
7. அகில இலங்கை சூபிச ஆன்மீகப் பேரவை – மௌலவி அல் ஹாபிழ் தாரிக் முஹம்மத் நூரி
8. மத்திய அஹதியா – ஏஆர்பிஎம் ஷிப்லி ஹாஷிம்
9. மீட்ஸ் – ஏஎஸ்எம் இல்யாஸ்
10. ஸலாமா – அஷ். எம்எஸ்எம் ரிகாஸ்
11. மிஷ்காத் ஆய்வு நிலையம் – அஷ்.எம்ஜேஎம் ஃபாரிஜ்
12. ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் – எம்டிஎம் ரிஸ்வி
13. கொழும்பு பெரிய பள்ளிவாசல் – அல்ஹாஜ் அஸார் ஹுஸைன்
14. அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் ஒன்றியம் – ஷாம் நவாஸ்
15. கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் – சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன்

வக்ப் சபையின் சார்பாக மௌலவி எம்.என்.எம்.இஜ்லான், அஷ். முப்தி முஸ்தபா ரஸா, மௌலவி அப்துல் ஜப்பார் ஆகியோரை இணைத்துக் கொள்வதற்கும்
முன்னாள் சபாநாயகரும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையத்தின் ஸ்தாபகருமான மர்ஹூம் அல்ஹாஜ் எம்எச் முஹம்மத் அவர்களின் புதல்வர் ஹுஸைன் முஹம்மத், முன்னாள் மேல்மாகாண ஆளுநர் மர்ஹூம் ஸெய்யித் அலவி மௌலானாவின் புதல்வர் ஸெய்யித் நகீப் மௌலானா ஆகிய இருவரையும் சிரேஷ்ட ஆலோசகர்களாக இணைத்துக் கொள்வதற்கும் அன்றைய தினம் தீர்மானிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையத்தின் தலைவர் அல்ஹாஜ் ஹுஸைன் முஹம்மத், இஸ்லாமிய ஐக்கிய பேரவைக்கு ஸ்ரீலங்காஇஸ்லாமிய நிலையத்தின் முகவரியைப் பயன்படுத்துமாறும் அதனது கூட்டங்களை நடத்துவதற்கு இந்த இடத்தைப் பயன்படுத்துமாறும் வேண்டிக் கொண்டார்.
ஸெரன்தீப் ஐக்கிய பேரவையின் தலைவர் அஷ். ஏஎன்எம் பிர்தௌஸ் மன்பஈ அவர்களின் துஆவுடனும் ஸலவாத்துடனும் கூட்டம் நிறைவு பெற்றது.

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...