ராமர் கோயில் வந்தது பிரச்சனை இல்லை என்றும், அங்குள்ள மசூதியை இடித்துத்
விட்டுகோயில் கட்டியதில்தான் திமுகவிற்கு உடன்பாடு இல்லை என தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாடு நோக்கு சுடர் தொடர் ஓட்டம் இன்று சென்னையில் தொடங்கியது.
பின்னர் அமைச்சர் உதயநிதி அயோத்தி ராமர் கோயில் திறப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில்,
`ராமர் கோவில் திறப்பு, மத நம்பிக்கை ஆகியவற்றில் திமுகவுக்கு எதிர்ப்பு இல்லை. மசூதியை இடித்து கோயில் கட்டியதால் அதற்கு திமுக உடன்படவில்லை” என்றார்,.
ராமர் கோயில் செல்வது அவர்கள்,அவர்கள் விருப்பம் இதனை அரசியலாக்க பார்க்க கூடாது என எடப்பாடி பழனிசாமி கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,
ராமர் கோயில் திறப்பிற்கோ, அல்லது மத நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை. அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதால்தான் அதில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை எனவும் கூறினார்.