ராமர் கோயில் திறப்புக்காக முஸ்லிம், கிறிஸ்துவர்கள் சிறப்பு வழிபாடு நடத்துங்கள: அசாம் முதல்வர்

Date:

நாளை ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற இருக்கும் நிலையில் முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் நாளை சிறப்பு வழிபாடு நடத்த வேண்டும் என அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்து உள்ளார்.

பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் ஹிமந்தா பிஸ்வா சர்மா முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

இவர், நாளை ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில் அசாம் தலைநகர் கவுகாத்தியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “இஸ்லாமிய சகோதரர்களே, கிறிஸ்தவ சகோதரர்களே, நாளை சிறப்புப் வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம், அனைத்து சாதி மற்றும் சமூகங்களை சேர்ந்த நாம் அனைவரும் அமைதியாக ஒன்றாக வாழ முடியும்.

இது இந்துக்களின் வெற்றி அல்ல, இந்திய நாகரிகத்தின் வெற்றி. இது ஒரு மதத்தின் வெற்றி கிடையாது. படையெடுப்பாளர் இந்தியாவின் ஒரு வழிபாட்டுத் தலத்தை இடித்தார்.

ஆம், பாபர் ஒரு படையெடுப்பாளர்தான். அவர் இந்துக்களை மட்டும் தாக்கவில்லை. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கும் பாபருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. பாபர் ஒரு வெளிநாட்டு சக்தி.” என்றார்.

ராமர் கோயில் திறப்பு விழாவின்போது அசாமில் அசம்பாவீதங்கள் ஏற்படாமல் தடுக்க பல கட்ட பாதுகாப்புகள் போடப்பட்டு உள்ளன.

கிபி 1528 ஆம் ஆண்டுஉத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் முகலாய பேரரசர் பாபரால் கட்டப்பட்டது பாபர் மசூதி.

495 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தக்கொண்டு இருந்த நிலையில், அது அமைந்து உள்ள நிலத்தை ராம ஜென்ம பூமி என்று உரிமை கோரி வந்த இந்துத்துவாவினர் கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதியை தகர்த்தனர். இதனால் நாடு முழுவதும் மதக் கலவரங்கள் மூண்டன.

இதனை அடுத்து பாபர் மசூதி நிலத்திற்கான வழக்கு விசாரணை கீழ் நீதிமன்றம் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை நடைபெற்றது.

கடந்த 2019 ஆம் ஆண்டு அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் இந்துத்துவ அமைப்பினரின் கோரிக்கையின்படி ராமர் கோயிலை கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்ததுது.

இதனை அடுத்து 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 பிரதமர் மோடி கோவிலின் அடிக்கல்லை நாட்டினார்.

அதன் தொடர்ச்சியாக ராமர் கோயில் கட்டுமானப் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நாளை கோயில் திறக்கப்பட உள்ளது. நாளை மதியம் 12 மணி முதல் 12:45 மணிக்குள் ராமர் சிலையை ராமர் கோயிலின் கருவறையில் வைக்க முடிவு செய்து உள்ளது.

திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள், மத குருக்கள் கலந்துகொள்ள உள்ளார்கள்.

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...